மறக்கருணை | அறக்கருணை |
ஸூரபத்மன் முருகனால் ஆட்கொள்ளப்பட்டான்.- அழிக்கப்படவில்லை - சேவலாகவும், மயிலாகவும். | வள்ளி, தெய்வயானைக்கு அருளியது, தேவர்களுக்கு அருளியது |
நரகாஸுரன் - க்ருஷ்ணனால் நற்கதி அடைந்தான். - பீஷ்மர் போரின்போது க்ருஷ்ணன் கடவுள் என்பதால் அவன் கையால் இறந்தால் வீர ஸ்வர்கத்தை விட உயர்ந்த வைகுண்ட பதவி கிடைக்குமென்பதால்தான் கிருஷ்ணன் கையால் சாவதை வரவேற்றார், கிருஷ்ணன் கையில் சக்கரம் எடுத்தபோது. | குசேலனுக்கு அருளியது... |
கும்பகர்ணன், மாரீசன் போன்றோர் இராவணன் கையால் சாவதை விட இராமன் கையால் விரும்பிச் செத்தனர். கடவுள் கையால் செத்தால் நற்கதி கிடைக்குமென்பதால். இராவணனே உயிர் வாழ்வதைவிட இராமன் கையால் சாகத் தயாராக இருந்தான். | சபரிக்கு அருளியது. |
அழித்தல் வேறு, ஆட்கொள்ளல் வேறு. இறைவன் ஆட்கொள்கின்றாரேயன்றி அழிப்பது இல்லை.