ப்ராண + ஆயாமம் - ப்ராணனினுடைய கட்டுப்படுத்துதல்/ ஒழுங்குபடுத்துதல். தண்ணீரை அணைகட்டி வாய்க்கால்கள் வழியாக சிறப்பாக பயன்படுத்துவது போல மூச்சைப் பயன்படுத்துதல். அடக்குதல் அன்று.
இடை, பிங்கலை, ஸுஷூம்னை (சுழுமுனை) என மூச்சு - நாடி - மூன்று.
இடது மூக்கில் ஓடுவது இடை (சந்திரகலை).
வலது மூக்கில் ஓடுவது பிங்கலை (ஸூரியகலை).
ஸமமாக ஓடுவது/ நடுவில் ஓடுவது ஸுஷூம்னை.