Friday, 27 May 2011

எழுதாக்கிளவி


    கிளவி - சொல், மாற்றம், மொழி, பதம் (पदम्), வார்த்தை (वार्था) - ஒரு பொருள் பன்மொழி. கிளத்தலால் கிளவி. மொழிவதால் மொழி. பொருள் ஆளாளுக்கு, இடத்துக்கு இடம், காலத்துக்கு காலம் மாறுபடுவதால் மாற்றம். பதம், வார்த்தை என்பன ஸம்ஸ்க்ருதமாகவும் இருக்கலாம்.
    ஒலிப்பு (उच्चारणम्) - உச்சாரணம் மாறிவிடக்கூடாது என்பதனால் கேட்டுப் படிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், எழுதுவதற்கு குறைவான முன்னுரிமையே அளிக்கப்பட்டதால், எழுதாக்கிளவி என்பது வேதத்தை மட்டுமே குறிப்பதாகும்.
    ஒலிப்பின் வகைகளாவன -
  1. மாத்திரை/ அளவு.
  2. ஏற்ற, இறக்கங்கள்.
  3. ஸம்ஸ்க்ருதத்தில்,
  4. ஓசைகள்/ இனங்கள்
  5. அளவு
    1. குறில் - ஒரு மாத்திரை,
    2. நெடில் - இரண்டு மாத்திரை,
    3. நீட்டல் - மூன்று மாத்திரையும், அதற்கு மேலும்.
  6. ஏற்ற, இறக்கங்கள்
    1. இறக்கம்
    2. நடுவு
    3. ஏற்றம்
    4. மீயேற்றம்
  7. ஓசைகள்/ இனங்கள்
    1. வல்லோசைகள்
    2. மெல்லோசைகள் - மூக்கால் ஒலிப்பது.
    மினி பஸ்-ஸ்டாப் என்பதற்கும், மினிபஸ் ஸ்டாப் என்பதற்கும் உள்ள வேறுபாடு போல.
    மினி பஸ்-ஸ்டாப்பில் தொலைதூர பேருந்துகள் நிற்காது. மினிபஸ்ஸும், நகர பேருந்தும் நிற்கும்.
    மினிபஸ் ஸ்டாப்பில் மினிபஸ் மட்டுமே நிற்கும்.
    அழுத்தம் (stress/ intonation) மாறிவிட்டால் பொருள் மாறுபடுவதற்கு இந்த்ர-சத்ரு கதையும் ஒரு எடுத்துக்காட்டு. இந்த்ரனைக் கொல்பவன் பிறப்பதற்கு பதிலாக இந்த்ரனால் கொல்லப்படுபவன் பிறந்தான் ஒலி மாறுபாட்டால்.
    கும்பகர்ணன் நித்ரத்துவம் பெற்றபோதும், நித்யத்துவம் என்று கூறுவதற்கு பதிலாக எழுத்தினைத் தவறாக மொழிந்ததே காரணம்.
    ச்ருதி (श्रुतिः) என்பதும் கேட்டு கேட்டு பயின்றதாலேயே. ஸ்ம்ருதி (स्मृतिः) என்பது ஞாபகம் வைத்து, ஞாபகம் வைத்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டதால்.
    இரண்டுமுறை சொல்வது நிறுத்தல் அடையாளமாகும்.
    மூக்கால் சொல்வது ஆத்மனேபத அடையாளமாகும்.
    அத்யாய தொடக்கம், அநுவ்ருத்தி போன்றவையும் ஒலிப்பால் குறிக்கப்படும்.
    उरणँरपरः । पाणिनि अष्टाध्यायी

Friday, 20 May 2011

கோயம்புத்தூர், ஈரோடு மாவட்ட சமயவகுப்பு ஆசிரியர் பயிற்சி முகாம் - 2011

    கோயம்புத்தூர், ஈரோடு மாவட்ட சமயவகுப்பு ஆசிரியர் பயிற்சி முகாம் -  நான்காம் ஆண்டு
    சித்திரை 29 முதல் சித்திரை 31 வரை கலியுகாதி 5113 (12,13,14-05-2011)
    நேரம்
    நிகழ்வுகள்
    04.30 மணி
    துயிலெழுதல், உடல்தூய்மை

    தேநீர்
    06.00 மணி முதல் 007.00 மணி வரை
    ப்ரார்த்தனை, பஜன்
    07.00 மணி முதல் 07.50 மணி வரை
    யோகாஸனம்
    திரு. ஜலாதரன்
    07.50 மணி முதல் 08.10 மணி வரை
    பூஜை[
    08.10 மணி முதல் 09.00 மணி வரை
    காலை உணவு
    09.00 மணி முதல் 10.00 மணி வரை
    வகுப்பு - ௧ (சொற்பொழிவு)
    10.00 மணி முதல் 11.00 மணி வரை
    வகுப்பு - ௨ (கதை)
    11.00 மணி முதல் 11.30 மணி வரை
    தேநீர் இடைவேளை
    11.30 மணி முதல் 12.00 மணி வரை
    வகுப்பு - ௩ (சொற்பொழிவு)
    12.00 மணி முதல் 12.10 மணி வரை
    பூஜை
    12.10 மணி முதல் 12.40 மணி வரை
    வகுப்பு - ௩ (சொற்பொழிவு) தொடர்ச்சி
    12.40 மணி முதல் 14.00 மணி வரை
    மதிய உணவு
    14.00 மணி முதல் 15.00 மணி வரை
    வகுப்பு - ௪ (குழு விவாதம்)
    15.00 மணி முதல் 16.00 மணி வரை
    வகுப்பு - ௫ (சொற்பொழிவு)
    16.00 மணி முதல் 16.30 மணி வரை
    தேநீர் இடைவேளை
    16.30 மணி முதல் 17.30 மணி வரை
    விளையாட்டு
    வித்யாஜோதி சிவக்குமார்/ வெள்ளலூர்
    17.30 மணி முதல் 18.15 மணி வரை
    ஒழிவு
    18.15 மணி முதல் 18.45 மணி வரை
    பூஜை
    18.45 மணி முதல் 19.00 மணி வரை
    பாடல் பயிற்சி
    19.00 மணி முதல் 20.00 மணி வரை
    வகுப்பு - ௬ (கலந்துரையாடல்)
    20.00 மணி முதல் 21.00 மணி வரை
    இரவு உணவு
    21.00 மணி முதல் 22.00 மணி வரை
    தனித்திறமை
    22.00 மணி முதல்
    ஓய்வு, துயில்